×

எஸ்.கைக்காட்டி பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

கோத்தகிரி, ஜன.4: கீழ் கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.கைக்காட்டி பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது‌. கீழ் கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.கைக்காட்டி பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் (பி.எல்.சி) ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்கு குன்னூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிடமணி, செயற்குழு உறுப்பினர் ராஜூ,பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் வரும் சட்ட மன்ற தேர்தலின் போது திமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதிக அளவிலான உறுப்பினர்களின் சேர்க்கை, கிராமங்கள் தோறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தேர்தலின் போது வெற்றியை உறுதி செய்யவேண்டும் என விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆல்வின், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கேபிள் சுரேஷ்‍, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் விசாலாட்சி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சரத்பாபு, மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், ராம்கோபால், ஒன்றிய துணை செயலாளர்கள் நாகராஜ், ருக்குமணி,பொருளாளர் பீட்டன்,அவைத்தலைவர் ஆனந்தன்,வழக்கறிரணி குயிலரசன், காக்கா சோலை ரவி, கணேஷ், உதயகுமார், கனகலிங்கம், பாலன், ரஞ்சித், சுப்ரமணியம், குமார், டேவிட் செல்லத்துரை, கலா, ராஜரத்தினம், சுமதி, வள்ளுவநேசன், சுமதி, விஜயகுமாரி, சந்தோஷ், எஜமான் ஐயா, மிதுன், திலிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post எஸ்.கைக்காட்டி பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,agents ,S.Kaikatti ,Kotagiri ,Lower Kotagiri union ,DMK unit agents meeting ,PLC ,Union Secretary ,Kavilorai Bheeman.… ,Dinakaran ,
× RELATED மேலூர் ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர் கூட்டம்