×

லாட்டரி விற்றவர் கைது

ஈரோடு,ஜன.5: ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பகுதியில் நேற்று முன்தினம் டவுன் போலீஸ் எஸ்ஐ மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்த ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்த நாசர் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 லாட்டரி சீட்டு மற்றும் ஒரு செல்போன், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post லாட்டரி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Town ,SI Matheswaran ,Nataraja Theater ,Erode Marapalam ,Karungalpalayam ,Kerala ,Dinakaran ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது