×

கஞ்சா சாக்லேட் விற்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

*விழுப்புரம் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா சாக்லேட் விற்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் கடந்த 2022 டிசம்பர் 24ம் தேதி பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனையிட்ட போது கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணையில், புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த அஜய்குமார் (30), பலராம்பிரீக் (30), காஞ்சிபுரம் படாளம் பகுதியை சேர்ந்த உக்ரிசன் பிரீக் (29) என்பதும், இவர்களின் பூர்வீகம் ஓடிஸா மாநிலம் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் மற்றும் உலர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாக்கியஜோதி (பொ) நேற்று தீர்ப்பளித்தார்.

அதில் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கஞ்சா சாக்லேட் விற்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Viluppuram Drug Prevention Court ,Viluppuram ,Special Narcotics Prevention Court ,Viluppuram district ,Viluppuram West Police ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்களை வைத்து சாதிவாரி...