×

சீர்காழி அருகே நடந்த மாநில அளவிலான கடற்கரை கையுந்து போட்டியில் சீர்காழி பள்ளி முதலிடம்

சீர்காழி : சீர்காழி அருகே நடந்த மாநில அளவிலான கடற்கரை கையுந்து போட்டியில் சீர்காழி பள்ளி முதலிடம் பெற்றது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நடராஜன் பிறந்தநாள் முன்னிட்டு மாநில அளவிலான கடற்கரை கையுந்து போட்டி 17 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் 15 மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 24 மாணவர்கள் அணியினரும் 16 பெண்கள் அணியினரும் கலந்து கொண்டு விளையாடினர்.

சீர்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜ்கமல் தலைமை வகித்தார். பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி தாளாளர் ஆதித்யா ராஜ் கமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். புதுச்சேரி வாலிபால் அசோசியேஷன் சங்க தலைவர் பெர்லின்ரவி, போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.

போட்டியில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் முதல் இடத்தையும், கடலூர் டேனிஷ் மிஷன் பள்ளி இரண்டாமிடமும், கோயம்புத்தூர் எஸ்விஜிவி பள்ளி மூன்றாமிடமும், திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி நான்காமிடம் பிடித்தனர்.

பெண்கள் அணி பிரிவில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஆயங்குடிபள்ளம் விஹெச்எஸ்எஸ் பள்ளி இரண்டாமிடமும், கடலூர் டேனிஷ் மிஷன் பள்ளி மூன்றாமிடமும், கோமல் அரசு மேல்நிலைப்பள்ளி நான்காமிடமும் படித்தனர்.

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சீர்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜ்கமல், புதுவை மாநில வாலிபால் சங்க தலைவர் பெர்லின்ரவி, நிர்வாக அதிகாரி சீனிவாசன் அகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். சர்வதேச கடற்கரை கையுந்து வீரர் ராபின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

விழாவில் நாகப்பட்டினம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகலிசன், மயிலாடுதுறை மாவட்ட அசோசியேஷன் தலைவர் பாபு, உடற்கல்வி இயக்குனர்கள் முரளிதரன், செல்லத்துரை, துணை முதல்வர்கள் புனிதவதி, பார்கவி, திருமுல்லைவாசல் கிராம பஞ்சாயத்தார் தேவராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சதீஷ், நித்தியா, உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் பள்ளி முதல்வர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

The post சீர்காழி அருகே நடந்த மாநில அளவிலான கடற்கரை கையுந்து போட்டியில் சீர்காழி பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi School ,Sirkazhi ,Best Educational Institutions ,Natarajan ,Thirumullaivasal beach ,Mayiladuthurai district… ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் தாலுகா அலுவலகம் புதிதாக கட்ட வேண்டும்