வானூர், டிச. 31: அனுமன் ஜெயந்தியையொட்டி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பஞ்சவடியில் அமைந்துள்ளது 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில். இங்கு நேற்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 6 மணி முதல் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியத்துடன் 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்றது.
மேலும் 120 கிலோ ஏலக்காய் மாலை 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து மாலை 4 மணியளவில் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2,000 லிட்டர் பால்அபிஷேகம் appeared first on Dinakaran.