- கோயம்பேடு
- சென்னை
- அரியலூர்
- பெரம்பலூர்
- திருச்சி
- திண்டுக்கல்
- பிறகு நான்
- கம்பம்
- Ottanchatram
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- ஓசூர்
- தின மலர்
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சின்னவெங்காயம் தினசரி 300 டன் வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மார்க்கெட்டுக்கு 150 டன் சின்ன வெங்காயம் மட்டுமே வந்ததால் அதன் விலை அதிகரித்தது. இதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 இருந்து ரூ.120க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80 இருந்து ரூ.38க்கும் குறைத்து விற்பனை செய்யப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முருங்கை காய் வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.400 இருந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளி, கோஸ் ரூ.20க்கும், உருளைக்கிழங்கு ரூ.33க்கும் கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் சேனை கிழங்கு, இஞ்சி, பீர்க்கங்காய், கோவைக்காய், குடை மிளகாய், எலுமிச்சை ஆகியவை ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பீன்ஸ், பட்டாணி, அவரைக்காய் ரூ.70க்கும், சவ்சவ், முள்ளங்கி ரூ.25க்கும், கத்திரிக்காய், காராமணி, பாகற்காய், கொத்தவரங்காய், மாங்காய் ஆகியவை ரூ.40க்கும், நூக்கல், பச்சை மிளகாய் காலிபிளவர், சுரைக்காய், புடலங்காய் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், புத்தாண்டை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை 6 மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் நேற்று காலை மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.3000ல் இருந்து ரூ.2,500க்கும், ஐஸ் மல்லி ரூ.2,800ல் இருந்து ரூ.2,100க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ.2,500ல் இருந்து ரூ.900க்கும், கனகாம்புரம் ரூ.2000ல் இருந்து ரூ.1,200க்கும், அரளி பூ ரூ.500ல் இருந்து ரூ.250க்கும், சாமந்தி ரூ.160ல் இருந்து ரூ.120க்கும், சம்பங்கி ரூ.230ல் இருந்து ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.260ல் இருந்து ரூ.160க்கும், பன்னீர் ரோஸ் ரூ.200ல் இருந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு: பூக்கள் விலை குறைந்தது appeared first on Dinakaran.