×

வலங்கைமான் அருகே பழுதடைந்த பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும்

வலங்கைமான், டிச. 31: வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் பழுதடைந்து நிலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலைய அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் ஊராட்சியில் வலங்கைமான்-பாபநாசம் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது பழுதடைந்துள்ளது.

மேலும் சாலைகள் உயரமான நிலையில் மழைக்காலங்களில் மழைநீர் பேருந்து நிறுத்தத்திற்கு உள்ளே சென்று குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த பேருந்து நிறுத்தத்தை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிறுத்தம் கட்டித்தர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வலங்கைமான் அருகே பழுதடைந்த பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Chandrasekarapuram ,Valangaiman-Papanasam road ,Thiruvarur district… ,Dinakaran ,
× RELATED வலங்கைமானில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்ற கோரிக்கை