×

பைக் திருடியவர் கைது

பெரம்பூர்: அயனாவரம் நம்மாழ்வார் பேட்டை பராக்கா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ் (48). இவர், புதிதாக வாங்கிய பல்சர் பைக்கை, கடந்த 27ம் தேதி இரவு, அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை சிக்னல் அருகே நிறுத்தி இருந்தார். நேற்று காலை 7 மணி அளவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். நேற்று காலை மூன்று மணி அளவில் தலைமைச் செயலக காலனி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை பிடித்து ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இம்தியாஸிடம் அந்த இருசக்கர வாகனத்தை காண்பித்தபோது அது தன்னுடைய இரு சக்கர வாகனம் தான் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்ததில் கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜூரியஸ் (30) என்பதும், இவர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பிறகு ஜூரியஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பைக் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Imtiaz ,Baraka Road ,Nammalwar Pettai, Ayanavaram ,Pulsar ,Ayanavaram-Coonoor Highway ,Dinakaran ,
× RELATED தனிமையில் உள்ளீர்களா… பெண்களிடம் பழக...