திருவொற்றியூர்: பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கையில் பால் பைதான் என்ற அரியவகை மலைப்பாம்புடன் பதிவை சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சென்னை வனத்துறை அதிகாரிகள் யூடியூபர் டி.டி.எப்.வாசன் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பாம்பிற்கு கூண்டு மற்றும் உணவாக எலியையும் திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வாங்கியதாக டி.டி.எப்.வாசன் வெளியிட்ட பதிவை வைத்து வனத்துறை அதிகாரிகள் நேற்று திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகில் உள்ள கடைக்கு அதிரடியாக வந்தனர். பின்னர் யூடியூபர் டி.டி.எப்.வாசன் வாங்கிய எலி குறித்து விசாரித்தனர். அப்போது அந்த கடைக்குள் அரியவகை கிளி மற்றும் ஆமைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து விசாரித்தனர். செல்லப்பிராணி விற்பனைக்கு தான் அனுமதி வாங்கி வைத்திருப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஆனாலும் கிளி மற்றும் ஆமையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.
The post கையில் பாம்புடன் டி.டி.எப்.வாசன் வீடியோ திருவொற்றியூர் செல்லப்பிராணி கடையில் வனத்துறை சோதனை appeared first on Dinakaran.