- வாட்சென்னை வெப்ப மின்
- நிலையம்
- சென்னை
- வட்செனாய் வெப்ப மின் நிலையம்
- அத்திப்பட்டில் வட சென்னை
- மீன்ச்சூர்
- வாட்செனை வெப்ப மின் நிலையம்
- தின மலர்
சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் இன்று காலை 2 அலகுகளில் திடீரென ஏற்பட்ட கொதிகலன் பழுது காரணமாக, மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அவற்றை சரிசெய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின்நிலையம் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இங்குள்ள முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என நாள்தோறும் மொத்தம் 1830 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். எனினும், கடந்த சில மாதங்களாகவே அனைத்து அனைத்து அலகுகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக கொதிகலன் பழுது உள்பட பல்வேறு இயந்திரக் கோளாறுகளால் தொடர்ச்சியாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடசென்னை அனல் மின்நிலையத்தில் இன்று காலை மீண்டும் 2வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாய் கசிவு காரணமாக 600 மெகாவாட், முதல் நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் என மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அவற்றை பழுது நீக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று அனல் மின்நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.