- குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
- முதல் அமைச்சர்
- நாகர்கோவில்
- சிலை
- கன்னியாகுமாரி
- மு.கே ஸ்டாலின்
- திருவள்ளுவர் சிலை
- விவேகானந்தர்…
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நடுக்கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை, முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே ₹37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் 1 மணியளவில் கன்னியாகுமரி வரும் முதல்வர், இரவில் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 11 மணியளவில் அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
The post குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.