×

சென்னையில் 4 இடங்களில் டார்லிங் ஷோரூம் திறப்பு: சிறப்பு தள்ளுபடி விற்பனை

சென்னை: தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வரும் முன்னணி வீட்டு உபயோகப் பொருள் விற்பனையாளரான ‘‘டார்லிங்” ஷோரூம், நேற்று சென்னையில் ஒரே நாளில் 4 பிரமாண்ட கிளைகள் (காட்டுப்பாக்கம், குன்றத்தூர், மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி) திறக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் கிளையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து சிறப்பித்தார். மேலும் பிரமாண்டமாக உருவாகிய காட்டுப்பாக்கம் கிளையை Haier Appliances India தலைவர் சதீஷ் திறந்து வைத்தார்.

மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி கிளைகளை கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் பாண்டியராஜன், Lloyd Havels India ஜெனரல் மேனேஜர் ஹரி ஆகியோர் திறந்து வைத்தனர். டார்லிங்-ன் திறப்பு விழா சலுகைகள் மக்களை கவரும் படி வடிவமைத்துள்ள காரணத்தினால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வந்து சென்றனர்.

மேலும் மக்களின் பேராதரவை கணக்கில் கொண்டு திறப்பு விழா சலுகைகள் ஜனவரி 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறப்பு விருந்தினர்களை டார்லிங் குழும இயக்குனர்கள் வெங்கட சுப்பு (தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர்), நவராஜா முருகன், அஜித் குமார் மற்றும் ஜேம்ஸ் விருந்தினர்களை சிறப்பித்தினர். இங்கு, வீட்டிற்கு தேவையான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, மொபைல் போன், சோபா, கட்டில், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை தள்ளுபடி விலையில், குறைந்த மாத தவணையில் விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் 4 இடங்களில் டார்லிங் ஷோரூம் திறப்பு: சிறப்பு தள்ளுபடி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Darling ,Tamil Nadu ,Kattupakkam ,Kundrathur ,Madhavaram ,Gummidipoondi ,Minister… ,Dinakaran ,
× RELATED நீதிபதிகள் குடியிருப்பில் மின்கட்டண...