×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சென்னை காவல்துறைக்கு மேதா பட்கர் பாராட்டு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சென்னை மாநகர காவல்துறையினர் சரியாக நடத்தி வருவதாக மேதா பட்கர் பாராட்டு தெரிவித்தார். மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி தலைவர் சந்தித்தார். சென்னை, கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தோஷி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி தலைவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சந்திப்பின்போது, பொற்கொடி மேதா பட்கரிடம் கொலை வழக்கின் விசாரணை குறித்து கேட்டறிந்தார். மேலும் சென்னை மாநகர காவல்துறை விசாரணையை முறையாக நடத்தி வருவதாக பொற்கொடி தெரிவித்தார். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய மேதா பட்கர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சென்னை மாநகர காவல்துறையினர் சரியாக நடத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சென்னை காவல்துறைக்கு மேதா பட்கர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Medha Patkar ,Chennai Police ,Armstrong ,Chennai ,Chennai Metropolitan Police ,National Alliance of People's Movements ,Doshi ,Konnur Highway, Chennai… ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு