×

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல வார்டு ரூ.3 கோடியில் அமைகிறது

 

திருப்பரங்குன்றம், டிச. 27: திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு பெண்கள், குழந்தைகள் நலம் உள்ளிட்ட 18 வார்டுகள் அமைக்க தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பூமிபூஜை விரைவில் நடைபெற உள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள ரயில் நிலையம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு, பிசியோதெரபி, மகப்பேறு, அவசர கிசிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும், சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்களின் முக்கிய சிகிச்சை மையமாக விளங்குவதாலும் கூடுதலாக பெண்கள், குழந்தைகள் நலம் உள்ளிட்ட 18 வார்டுகள் அமைக்க மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் கோரிக்கை விடுத்தார்.

இதன்பேரில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் அரசுமருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட வார்டுகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான பூமி பூஜை பணிகள் விரைவில் நடைபெறும் என, மண்டல தலைவர் சுவிதா விமல் தெரிவித்தார்.

The post திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல வார்டு ரூ.3 கோடியில் அமைகிறது appeared first on Dinakaran.

Tags : Tiruparankundram Government Hospital ,Tiruparankundram ,Tamil Nadu government ,Madurai ,Tiruparankundram Girivalapatthi… ,
× RELATED அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி...