திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு வந்தது. இதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த லக்கேஜில் சோதனை செய்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் ரெகுலேட்டரில் தங்கம் போன்ற உலோகம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரெகுலேட்டரை பறிமுதல் செய்து சோதனை செய்ததில், 194 கிராம் எடையுள்ள தங்கத்தை அதில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம். இதுதொடர்பாக அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.