×

உலக புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது

Avaniyapuram, madurai, Jallikattu

மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறந்த காளைக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீருக்கு நிசான் காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்., மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கேத தலைமையில் மாடு பிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அவனியாபுரத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அவனியாபுரத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தயார் நிலையில் மருத்துவ குழு

அவனியாபுரத்தில் 15 ஆம்புலன்ஸ் வண்டிகளும் சுமார் 26 மருத்துவ குழுக்களும் தயாரான உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிந்துள்ளது.

முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடு பிடிவீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற டீசர்ட் அணியின் காளைகளை அடக்கி வருகின்றார்.

சிறந்த காளைக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீருக்கு நிசான் காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

The post உலக புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Avaniapuram Jallikatu ,Madurai ,Pongal Festival ,Madurai district ,Avanyapuram Jallikat ,Avaniapuram Jallikatu Competitions ,
× RELATED புனித லூர்தன்னை ஆலய பொங்கல் விழா வழிபாடு