- கோவாய் சத்தியன்
- எடப்பாடி
- சென்னை
- உயர்நிலை நிர்வாகிகள்
- ஆதிமுக
- பொது
- எடபடி பாலனிசாமி
- எஸ். ஆர். விஜயகுமார்
- துணை செயலாளர்
- கோவிலம்பக்கம் சி. மணிமரன்
- டி.
- கோவை சத்யன்
- தின மலர்
சென்னை: அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.விஜயகுமார், துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் சி.மணிமாறன்; தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பொறுப்பில் இருக்கும் சிங்கை ஜி.ராமச்சந்திரன், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கோவை சத்யன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், அதிமுக மாணவர் அணி செயலாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்- எஸ்.ஆர்.விஜயகுமார், புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்-கோவிலம்பாக்கம் சி.மணிமாறன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்- எம். கோவை சத்யன் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
The post அதிமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம் ஐ.டி.விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.