லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை நேற்று வெளியானது. இந்தியா மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 2025, பிப். 19 முதல் மார்ச் 9 வரை இப்போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ளன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோதும் முதல் போட்டி, பிப். 20ம் தேதி துபாயில் வங்கதேசத்துடன் நடக்கிறது. அடுத்த 2 போட்டிகள், பிப். 23ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2ம் தேதி நியூசிலாந்துடனும் துபாயில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா அல்லாத பிற அணிகள் மோதும் போட்டிகள் பாகிஸ்தானில் 3 நகரங்களில் நடக்க உள்ளன. இதற்கு முன், 2023ல் ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் பாக்.கை எதிர்த்து ஆடியுள்ள இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின், 2024ல் நியூயார்க்கில் நடந்த ஐசிசி டி20 போட்டியில் பாக்., 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
The post பிப்.23ல் துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்: சாம்பியன்ஸ் கோப்பை பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.