×

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு கடையத்தில் காங்கிரசார் மவுன அஞ்சலி

கடையம், டிச.21: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான இளங்கோவன் மறைவுக்கு கடையம் வட்டார காங்கிரஸ் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இளங்கோவன் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. நிகழ்வில் கடையம் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் தலைமை வகித்தார். கடையம் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி பார்வதிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். மாவட்ட துணைத் தலைவர் முருகன், பேச்சாளர் தங்கம்மாள், அந்தோணி, சுப்பிரமணியன், ராமலிங்கபுரம் மாரியப்பன், முப்புடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு கடையத்தில் காங்கிரசார் மவுன அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Congress ,EVKS ,Ilangovan ,Kadayam ,Tamil Nadu Congress Committee ,president ,Erode East ,MLA Ilangovan ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு: பிப்ரவரியில் இடைத்தேர்தல்?