×

புரோ கபடி லீக்கில் இன்று குஜராத்-தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா-டெல்லி மோதல்

புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 11வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 109வது லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 42-38 என தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் -பெங்களூரு புல்ஸ் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனேரி 56-18 என அபார வெற்றி பெற்றது. இன்று இரவு 8 மணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ், இரவு 9 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி மோது
கின்றன.

The post புரோ கபடி லீக்கில் இன்று குஜராத்-தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா-டெல்லி மோதல் appeared first on Dinakaran.

Tags : Gujarat- ,Telugu Titans ,Ariana-Delhi ,Pro Kabaddi League ,Pune ,11th Pro Kabaddi League Series ,109th league ,Patna Pirates ,Tamil Thalavas ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து