- ஸ்ரீததத்ராயர்
- இமயமலை
- ஸ்ரீததாத்ராயர்
- ஜெயந்தி ஞானா பூமி
- வேத பூமி
- தேவாபூமி
- கர்மா பூமி
- புனித பூமி
- மவுனாஸ்
- மகரிஷி
14.12.2024 ஸ்ரீதத்தாத்ரேயர் ஜெயந்தி
ஞான பூமி, வேத பூமி, தேவ பூமி, கர்ம பூமி, புண்ணிய பூமி என்றெல்லாம் போற்றப்படும் அளவுக்கு நம் பாரத நாட்டுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள் மாமுனிவர்களும் மகரிஷிகளுமேயாவர். கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத விஷயங்களையும் அறியும் ஆற்றல் படைத்த இந்த ரிஷிகளில் முக்கியமானவர் அத்ரி மகரிஷி. இன்றும் யாக சாலைகளில் முதல் தட்சணை அந்த மகரிஷியின் பரம்பறையினருக்கே வழங்கப்படுகிறது. அவருடைய பரம்பரைக்கு ‘ஆத்ரேயர்’ என்று பெயர். ‘அத்ரி’ என்றால் மூன்றைக் கடந்தவர். அதாவது விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்த தூய உணர்வு என்று பொருள்படும்.
அத்ரி மகரிஷி தூய உணர்வாகத் தன்னை உணர்ந்து கொண்டவர். அவரது மனைவி அனுசுயா தேவி. நற்பண்புகளின் உறைவிடமானவள். கற்புக்கரசி. இருவரும் கடவுள் பக்தியில் சிறந்து விளங்கினார்கள்.முப்பெருந்தேவியரும் மும்மூர்த்திகளும் அவர்களின் மேன்மையை உணர்ந்தனர். அத்ரி தம்பதியருக்கும் காட்சி தந்த அவர்கள் ‘வேண்டும் வரம் யாது’ என்று அவர்கள் கேட்க, உடனே அத்ரியும் அனுசுயாதேவியும் ‘திரிமூர்த்தி ஸ்வரூபமாக எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்’ என்றனர். வரமும் வாய்த்தது.
இவ்வாறு அத்ரி மகரிஷிக்குக் கடவுளால் அருளப்பட்ட புத்திரரான தத்தாத்ரேயர் குரு நாதரிடம் சகல வித சாஸ்திரங்களையும் கற்றார்.தமது யோகம் மற்றும் ஞான சக்தியால் உலக மக்களுக்குப் பல நன்மைகள் அருளும் தத்தாத்ரேயர் பிரம்மாவின் அம்சமாக ஜபமாலை, கமண்டலம், மகாவிஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரம், சிவபெருமான் அம்சமாக சூலம், சின் முத்திரை ஆகியவற்றைத் தாங்கியிருக்கிறார். ஸ்ரீவித்யா உபாசனையிலும் இவருக்கு முக்கிய இடம் உண்டு. ஆத்ம ஞானத்தை ‘திரிபுரா ரகசியம்’ என்ற அற்புதமான நூல் மூலம் உபதேசித்தவராவார் இவருக்கு யயாதி மகாராஜா, கார்த்தவீர்யார்ஜூனன், பரசுராமர் ஆகியோர் முக்கிய சீடர்களாக விளங்கினார்கள்.
தத்தாத்ரேயர் ஒரு சமயம் இமயமலையைக் கடந்து செல்ல முயன்ற போது, இமயவான் அவர் முன் வந்து வணங்கி, ‘‘மகரிஷியே! தங்கள் வரவால் பெரும் பேறு பெற்றேன். உலகில் உயர்ந்த இப்பெரும் மலையைத் தாங்கள் கடக்க முற்படுவது என்ன காரணத்தால் என்பதால் நான் அறிந்து கொள்ளலாமா?’’ என்று மிகவும் பணிவுடன் கேட்டான்.
தத்தாத்ரேயர், ‘‘மலையரசனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும். மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலமலை, கந்தமாதனம் முதலிய மலைகள் எல்லாம் இமயம் போல் பிரம்மாண்டமாக இல்லை. இருந்தும் பக்தர்கள் அங்கெல்லாம் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். ஏன் தெரியுமா? பிரசித்தி பெற்ற தெய்வங்கள் உறையும் இடங்கள் பல அங்கு இருக்கின்றன. அது போல உன் மடியில் மறைந்துள்ள, அரிய சக்தி பெற்ற தலங்களை நேரில் தரிசித்து அதன் அருமை பெருமைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். இதற்காகவே வந்துள்ளேன்.
உன்னிடம் மறைந்துள்ள அந்த தெய்வீக இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்வாயாக!’’ என்று கூறினார் தத்தாத்ரேயர். அவரது வேண்டுகோளால் மகிழ்ந்த இமயவான் முதலில் கயிலைநாதனை அவருக்கு தரிசனம் செய்வித்தான். அதன்பின் இருவரும் மானசரோவரை அடைந்து புனித நீராடினர். மகாசக்தி பீடமாகத் திகழும் மானசரோவரின் அற்புத வரலாற்றையும் அதன் மகிமையையும் அவருக்கு இமயவான் எடுத்துக் கூறலானான்.
‘‘நான் முகனின் புத்திரர் மரீசி. ஒருமுறை கயிலையில் சிவபெருமானைக் குறித்து கடும் தவமிருக்க முற்பட்டார். உன்னிடம் மறைந்துள்ள அந்த தெய்வீக இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்வாயாக!’’ என்று கூறினார் தத்தாத்ரேயர். அவரது வேண்டுகோளால் மகிழ்ந்த இமயவான் முதலில் கயிலைநாதனை அவருக்கு தரிசனம் செய்வித்தான். அதன்பின் இருவரும் மானசரோவரை அடைந்து புனித நீராடினர். மகா சக்தி பீடமாகத் திகழும் மானசரோவரின் அற்புத வரலாற்றையும் அதன் மகிமையையும் அவருக்கு இமயவான் எடுத்துக் கூறலானான்.
‘‘நான்முகனின் புத்திரர் மரீசி. ஒருமுறை கயிலையில் சிவபெருமானைக் குறித்து கடும் தவமிருக்க முற்பட்டார். பன்னிரண்டு ஆண்டுகள் தாந்த்ரிக முறைப்படி சிவனை ஆராதிக்கத் திட்டமிட்டார் மரீசி. கடுங்குளிர் காலம் வந்தது. கயிலையிலிருந்த நீர் முழுவதும் பனிக்கட்டியாகி விட்டதால் அவர்கள் நீராடவும் பூஜைகள் செய்வதற்கும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட எங்கும் கிடைக்கவில்லை. நீராடி ஈர உடைகளோடு தாந்ரீக வழிபாடு தொடங்க வேண்டும் என்ற நியமம் உண்டு. தண்ணீருக்காக பலரும் இவ்வாறு தவித்துக் கொண்டிருக்கும் போது மரீசிக்குத் தன் தந்தையின் நினைவு வர அவரைப் பிரார்த்தித்தார். தன் முன் தோன்றிய தந்தை நான்முகனை மரீசியும் ஏனைய ரிஷிகளும் அடி பணிந்து தங்கள் தண்ணீர் கஷ்டத்தைக் கூறி அவரது உதவியைக் கோரினர்.
நான் முகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று கயிலை நாதனை நோக்கிப் பிரார்த்தித்தார். சிவபெருமானின் கருணையால் கயிலையில் படிந்திருந்த பனிக்கட்டிகள் உடனே உருகி ஆறாகப் பெருகி, அங்கிருந்த பிரம்மாண்டமான பள்ளத்தில் விழுந்து ஓர் அழகிய ஏரியானது. இதற்கு பிரம்மாவின் கருணை நிறைந்த மனமே காரணமாக அமைந்ததால் இந்த ஏரி ‘மானசரோவர்’ என்ற பெயர் அடைந்தது. சரோவர் என்றால் பெரிய நீர் நிலை என்று பொருள். மரீசியும் மற்ற முனிவர்களும் மானசரோவர் உதவியால் தங்கள் கடமைகளைச் செய்வனே முடித்துச் சிவபதம் எய்தினர். தத்தாத்ரேயருக்கு மானசரோவரின் மகிமையைப் பற்றி மேலும் கூறலானார் இமயவான்.
‘‘தத்தாத்ரேயரே! எல்லா சமயத்தினரும் மானசரோவரை பயபக்தியுடன் வலம் வருகின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு ஏற்கும் இப்புனித யாத்திரையை அங்கு ‘பரிக்ரமா’ என்கிறார்கள். ஜெய்தி என்ற இடத்திலிருந்து ‘பரிக்ரமா’ வைத் தொடங்கி முடிக்க யாத்ரீகர்களுக்கு இரண்டு நாட்களாகின்றன’’ ‘‘தத்தாத் ரேயரே! பாருங்கள் சலசலக்கும் ஓடை. சிலு சிலுக்கும் காற்று, இதமான குளிர். பளபளக்கும் பனி மூடிய சிகரங்கள். கண்களைக் கவரும் நீலவானம். பளிங்கு போன்ற தூய நீர். இவையெல்லாம் ‘பரிக்ரமா’ வாசிகளுக்குப் பல விதங்களில் உற்சாகத்தை ஊட்டும். இந்த மானசரோவரின் கரையில் உச்சி வேளையில் அலைகள் வந்து மோதினாலும் அதன் நடுப்பகுதி அமைதியாக தோற்றமளிக்கிறது பாருங்கள். இதனால் யாத்ரீகர்கள் உச்சி வேளையில்தான் நீராடுகின்றனர்.’’
‘‘தத்தாத்ரேயரே! மானசரோவரை, அதன் பரிசுத்தமான நீரை இறைவனே அளிக்கும் பிரசாதமாக பக்தர்கள் கருதுகின்றனர். இதை அருந்துவதால். இப்பிறவிப் பாவங்கள் விலகும். இதில் நீராடினாலோ பல தலைமுறை பாவங்கள் விலகி மோட்சம் அடைவர். மானசரோவர் ஏரியைச் சுற்றியுள்ள மலைகளில் பல அபூர்வ மூலிகைகள் உள்ளன. அவை மருத்துவ குணம் உடையவை. அவைகளின் மணமே மனதைக் கவரும்.’’
‘‘இந்த மானசரோவர் தடாகத்தில்’ பற்பல வண்ணப் பறவைகள் வந்து விளையாடும் அழகைப் பாருங்கள். எத்தனை அழகான கவின் மிகு காட்சிகள். மனதைக் கொள்ளை கொல்லும் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும். இந்த ஏரியில் வசிக்கும் ‘நகபா’ எனும் பறவைகள் கரையில் உள்ள புல் பூண்டுகளையே உண்டு வாழ்கின்றன. இந்த ஏரியிலிருந்து அபூர்வ ஒலியும், பாறை உருகுவதைப் போன்ற சப்தங்களும் குளிர்காலத்தில் கேட்டு ரசிக்கலாம். மானசரோவர் ஏரிக்கரையில் சில இடங்கள் மணற்பாங்கானவை. அங்கே பல வண்ணங்களில் கூழாங்கற்கள் சிறியதும் பெரியதுமாக அழகிய வடிவங்களில் சாளக்கிராமக் கற்களைப் போல் ஒளி வீசித்திகழும். இவற்றை பரிக்ரமா யாத்ரீகள் லிங்கமாகக் எடுத்து வந்து பூஜிக்கிறார்கள்.’’
‘‘தத்தாத்ரேயரே! இந்த மானசரோவர் ஏரியிலிருந்து தான் பல நதிகள் உற்பத்தியாகின்றன. தென் கிழக்குப் பகுதியிலிருந்து, பனிமூடிய சிகரத்திலிருந்து பிரம்ம புத்திரா நதி உற்பத்தியாகிறது. வடகிழக்கிலிருந்து சிந்து நதி பெருக்கெடுத்து ஒருகிறது. கிழக்குப் பகுதியிலிருந்து சட்லஜ் நதி பிறக்கிறது. தென்கிழக்குப் பகுதியில் மற்றொரு இடத்தில் கர்னாலி நதி உற்பத்தியாகிறது.’’ இமயவான் மேலும் மானசரோவரின் மகிமையைக் கூறலானார்.
‘‘தத்தாத்ரேயரே! மானசரோவர் யாத்திரையை மேற்கொள்பவர்கள் அங்கு பிரம்ம முகூர்த்த வேளையில் சில சமயம் நிகழும் அபூர்வ தெய்வீகத் திருக்காட்சியைக் காண்கிறார்கள். அந்தப் புனித வேளையில் வானுலகத்துத் தேவர்கள் எல்லோரும் புனித நீராட மானசரோவர் வருகிறார்கள். தேவ ரூபம் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதற்கு பதிலாக பல ஜோதி வடிவங்கள் வானிலிருந்து வரிசையாக ஏரியில் இறங்கி மறைந்து விடுகின்றன. சில சமயம் ஜோதி விளக்குப் போன்று பல விளக்குகள் கரையிலிருந்து புறப்பட்டு மறைந்து விடுகின்றன. புண்ணியம் செய்த பேறு பெற்ற யாத்ரீகள் சிலருக்கு மட்டும் அந்த அபூர்வக் காட்சிகள் தெரியும். இத்தகைய தெய்வீக நிகழ்ச்சியை காணும் பாக்கியம் ஒரே சிலருக்கே கிட்டுகிறது. ‘மெய் சிலிர்க்கச் செய்யும் அற்புதக் காட்சிகள்.’’
‘‘இமயத்தில் கயிலைமலை லிங்கத் திருமேனிக்கு மகாசக்தி பீடமான மானசரோவர் ஏரி அதற்கு ஆவுடையாராக அமைந்துள்ள அற்புதத் திருக்கோலத்தைக் கால மெல்லாம் கண்டு மகிழலாம். ‘தத்தாத்ரேயரே’ மானசரோவர் ஏரியின் மகிமை அளவிடற்கரியது!’’ என்று கூறி முடித்தார் இமயவான். இமயவான் வாயிலாக இமயத்தின் பெருமையையும் மானசரோவர் ஏரியின் மகிமை பற்றியும் அறிந்த தத்தாத்ரேயர்மனம் குளிர மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பல ஆண்டுகள் மானசரோவரை அடுத்துள்ள குகை ஒன்றில் தவம் செய்தார்.
இமயவான் அறிவுரைப் படி, அவர் இமயத்திலிருந்து யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், பசுபதிநாத், முக்திநாத், சாளக்கிராமம் போன்ற புண்ணியத் தலங்களைத் தரிசித்து இமயமலைக் காடுகளிலேயே தங்கிவிட்டார். இன்றும் அவரது தரிசனம் அக்காடு களில் எங்கேயாவது சிலருக்கு அபூர்வமாக கிட்டுகிறது.
ஆர்.சந்திரிகா
The post இமயமலைச்சாரலில் ஸ்ரீதத்தாத்ரேயர்! appeared first on Dinakaran.