புதுடெல்லி: தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஒரு பிரச்சனை என்றால் பாஜ அதற்கு ஆக்கபூர்வமாக தீர்வு காணுகிறது. வெள்ள நிவாரணத்துக்கு ஒன்றிய அரசு சார்பில் காலம் தாழ்த்தாமல் தமிழகத்துக்கு ரூ.944 கோடி விடுவித்தது. அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினோம்.
அப்போது மக்கள் வாழ்வாதாரத்துக்கு எதிரான டங்க்ஸ்டன் சுரங்க டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவரும் இதுகுறித்து உடனடியாக பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அடுத்த ஓரிரு நாளில் நல்ல செய்தி கண்டிப்பாக வரும்” என்றார்.
The post டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஓரிரு நாளில் நல்ல செய்தி வரும்: டெல்லியில் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.