×

கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில்,‘‘கடந்த வாரம் கனடாவில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கரமான இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி அளிக்கும்படி டொரான்டோவில் உள்ள தூதரகம்,வான்கூவர், துணை துாதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு உள்ள இந்திய தூதரகம், இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றன. அங்கு அதிகரித்து வரும் வெறுப்பு குற்றங்கள், வன்முறைகள் போன்றவற்றால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியர்கள், இந்திய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

The post கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Canada ,New Delhi ,Union External Affairs Ministry ,Randhir Jaiswal ,
× RELATED அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இந்திய...