- முஷ்டாக்
- டி 20
- ரஹானே
- மும்பை
- பெங்களூர்
- பரோடா
- சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர்
- முஷ்டாக் அலி
- தின மலர்
பெங்களூர்: சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்கள் பரோடா-மும்பை அணிகள் மோதின. பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த 2 முறை சாம்பியன் பரோடா 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158ரன் எடுத்தது. தொடர்ந்து 159ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை விளையாடியது.
பிரித்வி ஷா 8 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தாலும், அஜிங்கிய ரகானே 98(56பந்து), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 46(30பந்து) ரன் விளாசி இலக்கை நெருங்கினர். வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் சூரியனஷ், சிக்சர் விளாசி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அதனால் மும்பை 17.2ஓவரில் 4விக்கெட் இழந்து 164ரன் எடுத்து 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. மும்பை 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. ரகானே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
The post முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: ரகானே அதிரடி: பைனலில் மும்பை appeared first on Dinakaran.