×

ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக ஐகோர்ட்!!

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமியை கொலை செய்தது தொடர்பாக பெங்களூரு காமாட்சி பாளையா காவல்துறையினர் கைது செய்து பல்லாரி சிறையில் அடைத்தார்கள். அவருக்கு சிறையில் முதுகு வலி ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து தர்ஷன் பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிரந்தர ஜாமீன் கோரியும் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 9ம் தேதி நடந்த விசாரணையின்போது தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். நேற்று வரை தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.

இந்நிலையில், நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மதியம் 2.30 மணியளவில் அறிவிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக ஐகோர்ட்!! appeared first on Dinakaran.

Tags : Karnataka iCourt ,Darshan ,Bangalore ,Karnataka High Court ,Bavithra Gowda ,Renugasamy ,Bangalore Comedy Palaiya ,Darshan Chitradurga ,Renukasamy ,
× RELATED ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 7 பேருக்கு ஜாமீன்