- சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
- திருத்துறைப்பூண்டி
- காடிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி
- திருவாரூர்
- தலைமை ஆசிரியர்
- எம்.சி.பாலு...
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, டிச. 13: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்து பேசுகையில், சமூகம், கலாச்சாரம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மேலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்றார்.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், எழுத்துரிமை போன்ற அடிப்படை தேவைகளை பெற்று இனம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு என எதிலும் பாகுபாடு பார்க்க கூடாது என்பதை உணர்த்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாக குறிப்பிட்டார். சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டேன் என்று ஒவ்வொரு மாணவ, மாணவியரும் இந்நாளில் உறுதி எடுக்க வேண்டும் என்றார். ஆசிரியர் கபிர்தாஸ் உறுதிமொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்திருந்தார்.
The post சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.