பட்டுக்கோட்டை, டிச. 13: பட்டுக்கோட்டையில் நேற்று சுமார் அரைமணிநேரத்திற்கு கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னை வானிலை மையம் தஞ்சை மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு அலர்ட் அறிவித்த நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று காலை முதலே நல்ல மழை பெய்தது. நேற்று காலை மழை பெய்யத் துவங்கியது. இந்த மழையானது விட்டுவிட்டு லேசானது முதல் மிதமான மழையாக பெய்து வந்தது. குறிப்பாக நேற்று காலை சுமார் 10 மணியளவில் பலத்த மழையாக பெய்தது.
இந்த மழை சுமார் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனைத் தொடர்ந்தும் விட்டுவிட்டு தற்போதுவரை லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் தேங்காத வண்ணம் உடனடியாக வடிவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்காமல் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
The post பட்டுக்கோட்டையில் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை appeared first on Dinakaran.