×

தி.மலை கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி- தஞ்சை-விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில் 13ம் தேதி இயக்கம்

 

கும்பகோணம், டிச.13: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சிறப்பு விரைவு இரயில் 13, 14ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது. திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாவையொட்டி, நாளை டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.20 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு; தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு பகல் 1.25 மணிக்கு செல்கிறது.

இதே ரயில், அன்று இரவு 12.25 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து சேரும் வகையில் ஒரு சிறப்பு விரைவு இரயில் (ஒரு நாள் மட்டும்) தென்னக இரயில்வே இயக்க உள்ளது. இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

The post தி.மலை கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி- தஞ்சை-விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில் 13ம் தேதி இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Trichy-Tanjavur ,Villupuram ,Karthigai Deepath ,Kumbakonam ,Trichy ,Thanjavur ,Trichy-Tanjavur-Villupuram ,Karthigai ,Deepath ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை...