நன்றி குங்குமம் தோழி
மார்கழி மாதம் துவங்கினாலே சென்னையில் உள்ள அனைத்து சபாக்களிலும் இசை, நாடகம் மற்றும் நடனக் கச்சேரிகள் என நிரம்பி வழியும். இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் MDnD நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கல்யாண சுந்தரம். MDnD என்பது ‘இசை, நடனம் மற்றும் நாடகத்தினை குறிக்கும். இந்தியக் கலை நிகழ்ச்சிகளுக்கான உலகளாவிய இணையத்தளமாக செயல்பட்டு வரும் இத்தளம், மார்கழி சங்கீத சீசன் குறித்து டிக்கெட்டுகள் பற்றிய விவரங்களை தங்களின் www.mdnd.in இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக இசைப் பிரியர்கள் உலகில் எங்கிருந்தும் இசை, நடனம் மற்றும் நாடக நிகழ்வினை கண்டு ரசிக்கும்படி இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் சீசன் டிக்கெட்டுகள், தினசரி டிக்கெட்டுகள், சபாக்களில் செயல்படும் கேன்டீன் உணவுகள் என அனைத்து நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வாங்கலாம். அதே போல் ஒரே நேரத்தில் வெவ்வேறு சபாக்களில் நடைபெறும் நிழச்சிக்கான டிக்கெட்களையும் பெறலாம். இதன் மூலம் டிக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உயர் ரக பிராண்ட்களின் பொருட்களை வாங்குவதற்கான சலுகைகளும் வழங்கப்படுகிறது.
இணையத்தில் நாரதகான சபா, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், பிரம்ம ஞான சபா, பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், நாத சுதா, தமிழ் இசை சங்கம், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, பாரத் கலாச்சார், வாணி மஹால், சார்சூர் கலை அறக்கட்டளை, தமிழ் கலாச்சார அகாடமி போன்ற சபாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை பெற்றுக்ெகாள்ளலாம்.
கச்சேரிகளுக்கு முன்பதிவு செய்பவர்களுக்காக உணவு டோக்கன்களை ஆன்லைன் முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை மற்றும் முன்னுரிமை வசதிகள் உண்டு. இணையத்தில் இசை, நடனம் அல்லது நாடகத்தை குறித்து பார்வையாளர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிடவும் செய்யலாம். அவை வாட்ஸப் மற்றும் மற்ற சமூக ஊடகங்களிலும் எளிதில் பகிரும் வசதியினை இந்த இணையம் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார் கல்யாண சுந்தரம்.
தொகுப்பு: பிரியா மோகன்
The post மார்கழி உற்சவம்! appeared first on Dinakaran.