- அமராவதி நதி
- கரூர்
- திருப்பூர் மாவட்டம்
- காவேரி நதி
- திருமுக்கொடலூர்
- கரூர் மாவட்டம்
- அண்டங்கோயில்
- படிக்கட்டு
- லைட் ஹவுஸ் கார்னர்
- பாசுப்பதிபாளையம்
- கரூர் நகரம்
- திருமுக்கூடலூர்
- தின மலர்
கரூர், டிச. 12: திருப்பூர் மாவட்டத்தில் துவங்கி கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு கலக்கிறது. இதில், கருர் மாநகரில் அமராவதி ஆறு ஆண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளின் வழியாக திருமுக்கூடலூர் நோக்கிச் செல்கிறது. கரூர் மாநகரின் வழியாக அமராவதி ஆறு பயணிக்கும் நிலையில், மாநகராட்சியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றங்கரையில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஆற்றின் தன்மையும் வெகுவாக பாதிப்படை அடைந்து வருகிறது. எனவே, இந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
The post அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.