×

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

 

குளித்தலை, டிச. 11: அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவுறுத்தலின் படி, மனித உரிமைகள் தினம் கரூர் மாவட்டம் குளி த்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பொ அன்பரசு (பொ) தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ஜெகதீசன் உறுதிமொழி வாசிக்க, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியர் வேணுகோபால் உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் தமிழ்துறை பேராசிரியர்கள் சரவணன், கோபாலகிருஷ்ணன், ஜெய்சங்கர், ஜெயராஜ், விஜயலட்சுமி நதி,சுரேஷ், பிரபாகரன், சந்திரசேகரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

The post குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Human Rights Day ,Dr. Kalainar Government College of Arts, Khuthalai ,Bharathidasan University ,Karur ,
× RELATED அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை...