×

தெலங்கானாவில் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்து வந்த ரகுநாத் ரெட்டி என்ற இளைஞர் கைது

தெலங்கானா: சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவர்களை ‘சமூக ஊடக செல்’ மூலமாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிக்னல் ஆப் மூலம் அதிகப்படியான குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிர்வது குறித்து போலீசாருக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக மேற்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் ip ஐடியை வைத்து தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரகுநாத் ரெட்டி என்ற 22 வயதான இளைஞரை போலீசார் தெலுங்கானாவில் கைது செய்தனர்.

ரகுநாத் ரெட்டியிடம் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. இவர் சிக்னல் செயலியில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதற்காக குழு அமைத்துள்ளார் எனவும் அதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிரப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதுமட்டுமின்றி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரகுநாத் ரெட்டியை மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இதில் பலருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களை ip ஐடியை வைத்து கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரகுநாத் ரெட்டியின் செல்போனியில் குழந்தைகளின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருப்பது கண்டுபிடித்துள்ள நிலையில் தொடர்ந்து அவரது செல்போனை ஆய்வு செய்யும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தெலங்கானாவில் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்து வந்த ரகுநாத் ரெட்டி என்ற இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Raghunath Reddy ,Telangana ,
× RELATED தெலங்கானாவில் பரபரப்பு சிறுமியை...