×

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புதுக்கண்மாய் கரை உடைந்து 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புதுக்கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் கரை உடைந்து 250 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிகப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்துவந்த வட்டாட்சியர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிங்கம்புணரி அருகே உள்ள எம்.கோவில்பட்டி, வேங்கைபட்டி கிராமங்களுக்கு அருகே புதுக்கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பி சுமார் 350 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பாலாற்றில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டுவந்து புதுகண்மாயில் சேகரித்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுகண்மாய் முழுகொள்ளவை எட்டியது. இதனை தொடர்ந்து கண்மாயில் இருந்து உபரிநீர் வெளியேறி வந்தது. இந்நிலையில் கண்மாய் கரையில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. அதன் வழியாக தண்ணீர் வெளியேரத் தொடங்கியது. தொடர்ந்த அந்த வழியாக தண்ணீர் அதிக அளவில் வெளியேறியதால் சுமார் 250 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் தண்ணீர் வெளியேறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

The post சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புதுக்கண்மாய் கரை உடைந்து 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Pudukanmai beach ,Singambunari ,Sivaganga district ,Sivaganga ,Singampunari ,Pudukanmai ,Dinakaran ,
× RELATED 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்