×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருந்து தென்னாப்பிரிக்க அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றதன் மூலம் முதலிடத்தை பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 109 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 63.33% முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 60.71% 2ம் இடத்திலும், இந்தியா 57.29% 3ம் இடத்திலும், இலங்கை 45.45% 4வது இடத்திலும் உள்ளன. இந்தப்பட்டியலில் 5 முதல் 9 இடங்களில் இங்கிலாந்து 45.24%, நியூசிலாந்து 44.23%, பாகிஸ்தான் 33.33%, வங்காளதேசம் 31.25%, வெஸ்ட் இண்டீஸ் 24.24% அணிகள் உள்ளன.

 

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி! appeared first on Dinakaran.

Tags : World Test Championship ,South Africa ,Sri Lanka ,Pakistan ,South African ,Dinakaran ,
× RELATED தரவரிசை பட்டியலில் நியூசிக்கு 4ம் இடம்