×

ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு; 2 பேர் மாயம்!

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் மயமாகி உள்ளனர். இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளார்.

மேலும், 2 பேர் மயமாகி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால், 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இந்நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் 172 கிராமங்களை அழித்தது மற்றும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக அரசாங்க முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் நெல் வயல்களை அழித்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

The post ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு; 2 பேர் மாயம்! appeared first on Dinakaran.

Tags : of Java ,Indonesia ,of ,Java, Indonesia ,Java ,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவா தீவில் வெள்ளம்: 10 பேர் பலி