- டெல்டா மாவட்டம்
- அரசு வேளாண் கல்லூரி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
- திருவாரூர்
- மார்க்சிஸ்ட்
- கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டம்
- மாநாட்டில்
- திருவாரூர்
- தின மலர்
*அரசு வேளாண் கல்லூரி தேவை
*மார்க்சிஸ்ட் கம்யூ மாநாட்டில் தீர்மானம்
திருவாரூர் : டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,திருவாரூரில் வேளாண் கல்லூரி வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் மத்திய குழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், சாமிநடராஜன், சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் சேகர், கந்தசாமி, ஜோதிபாசு, வீரபாண்டியன், ரகுராமன், முருகானந்தம், தமிழ்மணி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில், புதிய மாவட்ட செயலாளராக முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்ட சபையில் அறிவித்ததை தமிழ்நாடு அரசு உரிய முயற்சி மேற்கொண்டு சட்டமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வைக்கோல் மற்றும் மூங்கில் கொண்டு வேளாண் நிலம் பாதிக்காத வகையில் காகித தொழிற்சாலை உருவாக்கிடவும், திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைத்திட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி,சட்ட கூலி ரூ 319யை- முழுமையாக வழங்க வேண்டும்.
நகர்புற பகுதியில் 100 நாள் வேலையை விரிவு படுத்த்தி வேலை கேட்டு பதிவு செய்ய அனைவருக்கும் ஜாப் கார்டு உடனே வழங்கிட வேண்டும், முறைசாரா தொழில்களான கட்டுமானம், சுமைப்பணி, தையல், ஆட்டோ ஆகிய தொழில்களில் ஈடுபடும் தொழிலாளருக்கு நலவாரிய உதவிகளை இரட்டடிப்பாக்கி கொடுக்க வேண்டும்.
நலவாரிய அலுவலகம் மூலம் மாதந்தோறும் நகராட்சி, ஒன்றிய தலைநகரங்களில் நல வாரிய பதிவு முகாம் நடத்த வேண்டும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 14 ஆண்டுகள் கடந்தும் மருத்துவக் கல்லூரிக்கான தரம் உயர்த்தப்படவில்லை அவசர உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தமிழக அரசு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர், செவிலியர், ஊழியர்கள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பி விட வேண்டும்.
தஞ்சாவூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பணி நிறைவேறாத நிலையில் சட்ட விரோதமாக திறக்கப்பட்டுள்ள கோவில்வெண்ணி சுங்க சாவடியை உடனே மூட வேண்டும், தற்போது செயல்பட்டு வரும் சூழலில் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உட்பட அனைத்து பகுதிகளும் வாகனங்களுக்கும் சுங்ககட்டணம் வசூலிக்க கூடாதுஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.