×

தொழிற்சாலை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து 6 வயது சிறுவன் சாவு: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை கட்டுவதற்காக பில்லருக்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான். பீகார் மாநிலம் காஜூகாட் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (28). கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி லலிதாகுமாரி. இவர்களுக்கு அபிநேக் குமார் (6) உள்பட 2 குழந்தைகள். ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் பகுதியில் தங்கியிருந்து தொழிற்சாலை கட்டுமான பணி செய்துவந்தனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக கட்டிடத்தில் பில்லருக்கு தோண்டப்பட்டுள்ள பெரிய பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கட்டிட பணிகளும் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அபிநேக்குமாரை காணவில்லை என்றதும் பெற்றோர் தேடி அலைந்துள்ளனர். அங்கு பல இடங்களில் தேடியபோது தொழிற்சாலை கட்டிட பில்லர் பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரில் அபிநேக்குமார் உடல் மிதப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி துடித்தனர். இதுபற்றி அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வந்து சிறுவன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிற்சாலை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து 6 வயது சிறுவன் சாவு: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Mukesh ,Khajughat ,Bihar ,Lalithakumari ,Apineg ,Dinakaran ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கில் நடிகர்கள்...