×

வலை தளத்தில் அல்ல… களத்தில் வேலை செய்பவர்கள் நாங்கள்: அன்பில் மகேஷ் காட்டம்

திருவெறும்பூர்: திருச்சி அடுத்த திருவெறும்பூர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சம்பிரதாயத்துக்காக மழை, வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு போட்டோ எடுத்து விளம்பரம் தேடி கொள்கின்றனர் என்று விஜய் கூறியுள்ளார். களத்தில் யார் வேலை பார்க்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். சமூக வலைதளத்தில் பணியாற்றுவதை காட்டிலும் களத்தில் பணியாற்றி பார்த்தால் தான் மக்களின் பிரச்னை என்ன என்பது தெரியும்.

மழை, வெள்ள பாதிப்பு எதுவாக இருந்தாலும் உடனடியாக களத்துக்கு சென்று நிலவரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் 2 நாட்களில் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை இப்படி பல பகுதிகளுக்கு 2500 கிமீ பயணித்து புயல் பாதிப்பை பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டதுடன் உடனடியாக செய்து தரக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எப்போதும் மக்களோடு மக்களாக நாங்கள் இருக்கிறோம். எங்களோடு மக்கள் இருக்கிறார்கள் என்றார்.

The post வலை தளத்தில் அல்ல… களத்தில் வேலை செய்பவர்கள் நாங்கள்: அன்பில் மகேஷ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Mahesh Katham ,Thiruverampur ,Thiruvarumpur ,Trichy ,Minister ,Anbil Mahesh ,Mahesh Kadam ,
× RELATED திருவெறும்பூர் அருகே பெற்றோருடன் தகராறில் வாலிபர் தற்கொலை