×

திருவெறும்பூர் அருகே பெற்றோருடன் தகராறில் வாலிபர் தற்கொலை

 

திருவெறும்பூர், நவ.30: திருவெறும்பூர் அருகே பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முன்னாள் ஊர்க்காவல் படை ஊழியர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் ஒன்றிய காலனியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் சதீஷ்குமார் (30). இவர் ஊர் காவல் படையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 27ம் தேதி சதீஷ்குமாருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் கடந்த 27ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சதீஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே பெற்றோருடன் தகராறில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvarumpur ,Thiruvananthapuram ,Urkhawal ,Thiruverampur ,Rajasekar ,Union Colony ,Thiruverumpur ,
× RELATED வலை தளத்தில் அல்ல… களத்தில் வேலை...