×

விஜயகோபாலபுரத்தில் புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது

 

பாடாலூர், டிச. 8: விஜயகோபாலபுரத்தில் ஹான்ஸ் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக ஹான்ஸ் விற்பனை செய்யப்படுவதாக நேற்று பாடாலூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி எஸ்ஐகள் திருஞானம், சகாய செல்வம் மற்றும் ஏட்டு உதயகுமார் ஆகியோர் தலைமையில் பல்வேறு இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் வீரமணி (27).என்பவரை பிடித்தனர். இதில் அவர் பார்க்கிங்கில் பகுதியில் ஹான்ஸ் விற்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post விஜயகோபாலபுரத்தில் புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vijayagopalapuram ,Badalur ,Perambalur ,SP ,Adarsh Basera ,
× RELATED தரச் சான்றிதழுக்கான தகுதிகள்...