×

மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: விடுதலைப்புலிகள் மீதான தடையை டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 14ம் தேதி மேலும் 5 ஆண்டு தடையை நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,’விடுதலைப் புலிகள் மீதான ஐந்தாண்டு தடை நீடிப்பை தீர்ப்பாயம் உறுதி செய்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு இன்று வரை தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும், எனவே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அடுத்த ஐந்தாண்டு தடையை நீட்டிக்கும் ஒன்றிய அரசின் முடிவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத்பிரிதம் சிங் அரோரா அடங்கிய தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

The post மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : LTTE ,Delhi High Court Tribunal ,New Delhi ,Rajiv Gandhi ,India ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...