×

இலுப்பையூர் நடுநிலை பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

அரியலூர், டிச. 7: அரியலூர் அடுத்த இலுப்பையூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்று நடைபெற்றது. குமரி கடலின் நடுவே 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுப் பெறவுள்ளதை முன்னிட்டு, நடைபெற்ற இந்த போட்டியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயராணி தொடக்கி வைத்து, போட்டியின் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களில் நேகா, ராஜ, இனியா, கார்த்திகா, மகாலட்சுமி, சுவாதி, வைசாலி, அனு, தீபிகா, ஓவியா, அய்யாக்கண்ணு, விக்னேஷ், சபரீஸ்வரன், தினேஷ் ஆகியோர் வெற்றிப் பெற்றனர். அவர்களுக்கு மாலையில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ, ஆல்பர்ட் , அருள்ராஜ், மதியழகன், அனிதா, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர்.

The post இலுப்பையூர் நடுநிலை பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Thirukkural Essay Competition ,Ilupbaiyur Middle School ,Ariyalur ,Thirukkural approval competition ,Panchayat Union Middle School ,Ilupbaiyur ,Thiruvalluvar ,Kumari sea ,Thirukkural Appraisal Competition ,Dinakaran ,
× RELATED டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு...