×

மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த செயல்விளக்கம்

ஜெயங்கொண்டம், டிச.7: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கிரீடு தொண்டு நிறுவன தலைவர் முனைவர் நடனசபாபதி அறிவுறுத்தலின் பேரில் சோழமாதேவி வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் அழகுகண்ணன் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் அனைவரையும் வரவேற்றார்.

இந்திய எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா பள்ளி செயல் திட்ட கல்வியாளர் பாஸ்கர் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு நீரில் ஒளிவிலகல், எரிதலுக்கு ஆக்சிஜன் தேவை, ஆய்வகத்தில் கார்பன் டை ஆக்சைடு தயாரித்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை உலோகம் மற்றும் அலோகம் வேதிவினை செயல்பாடுகள் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு தயாரித்தல் போன்ற இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த சோதனைகளை செய்து காட்டி வாழ்வியலோடு தொடர்பு படுத்தி செயல் விளக்கங்கள் மாணவர்களுக்கு கூறினர். பங்கேற்ற மாணவர்கள் ஆக்கபூர்வமான எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில்கள் கூறப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஹேமலதா, பவானி, ஜெயப்பிரியா, கவிதா ஆகியோர் செய்திருந்தனர். கணிதப்பட்டதாரி ஆசிரியர் செல்லதுரை நன்றி கூறினார்.

The post மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Dr. ,Cholamadevi ,Agricultural Science Center ,Cholamadevi Agricultural Science Center ,Puduchavadi Panchayat Union Middle School ,Jayangondam Union ,Crown Charity Foundation ,
× RELATED பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு கூட்டம்