கெபேரா: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா அணி 233 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் டர்பனில் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்திருந்தது. ரயான் ரிக்கல்டன் 101 ரன் எடுத்து அவுட்டானார்.
2ம் நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென் ஆப்ரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன் எடுத்தது. கைல் வெரைன் அவுட்டாகாமல் 105 ரன் எடுத்தார். பின் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி வீரர்கள் பதும் நிசங்கா 89, திமுத் கருணாரத்னே 20. தினேஷ் சண்டிமல் 44 ரன் எடுத்து அவுட்டாகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்திருந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 40, கமிந்து மெண்டிஸ் 30 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
The post தென் ஆப்ரிக்கா 358 ரன் குவிப்பு appeared first on Dinakaran.