×

சிவகங்கையில் புதிய பூங்கா திறப்பு

சிவகங்கை, டிச. 6: சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 26 மற்றும் 27பகுதிகளை உள்ளடக்கிய இந்திரா நகர் பகுதியில், 2024-2025ம் நிதியாண்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 864ச.மீ பரப்பளவில், ரூ.37லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்பட்டது. பணிகள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பூங்காவை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த், சிவகங்கை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணராம், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகராட்சி பொறியாளர் முத்து, நகர்மன்ற உறுப்பினர் மதியழகன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கையில் புதிய பூங்கா திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Indira Nagar ,Ward No. ,Sivaganga Municipality ,Dinakaran ,
× RELATED பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு...