×

வரிசையாக நின்று வாக்களித்த வாக்காளர்கள்

கரூர், டிச. 6: கரூர் ரயில்வே அசிஸ்டெண்ட் டிவிசனல் இன்ஜினியர் (ஏடிஇஎன்) அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் ஏராளமானோர் வரிசையாக சென்று வாக்களித்தனர். டிசம்பர் 4 மற்றும் 5ம்தேதி என இரண்டு நாட்கள் சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சில ரயில்வே நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் கரூர் அசிஸ்டெண்ட் டிவிசனல் இன்ஜினியர் அலுவலகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள இந்த தேர்தலில் நேற்று காலை முதல் மாலை வரை ஏராளமானோர் வரிசையாக வாக்களித்தனர்.இதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மாலை வரை இரண்டாவது நாளாக நடைபெற்ற வாக்குப்பதிவில் விடுபட்ட அனைவரும் சென்று தங்களின் வாக்குகளை செலுத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வரிசையாக நின்று வாக்களித்த வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Tags : Karur ,union recognition ,Karur Assistant Divisional Engineer ,ATEN ,Salem Mandal ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகராட்சி பகுதி வழியாக...