×

நங்கவரம் அருகே 100 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்

கரூர், டிச. 6: கரூர் மாவட்டம் நங்கவரம் அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற நபர் மீது போலீசார் வழக்கு பதி ந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற் பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம், கரூர் மாவட்டம் நங்கவரம் அடுத்துள்ள நடுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக இதே பகுதியை சேர்ந்த ஒருவர் மீது நங்கவரம் போலீசார் வழக்கு பதிந்து அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

The post நங்கவரம் அருகே 100 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nangavaram ,Karur ,Karur district ,Gutka ,Dinakaran ,
× RELATED வெள்ளியணை அருகே கஞ்சா விற்க முயன்றவர் மீது வழக்கு பதிவு