- ரபி
- சின்னவீரசங்கிலி
- ஈரோடு
- கிராம வேளாண்மை மேம்பாட்டுக்
- சின்ன வீரசங்கிலி
- பெருந்துறை தாலுகா வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம்
- அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
- சின்னவீரசங்கிலி
- சின்னவீரசங்கிலி
- தின மலர்
ஈரோடு, டிச. 5: சின்ன வீரசங்கிலியில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு ரபி பருவ பயிற்சி முகாம் நடந்தது. பெருந்துறை தாலுகா வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான சின்னவீரசங்கிலி கிராமத்தில் வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு ரபி பருவ பயிற்சி முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணம்மாள் தொடங்கி வைத்தார். தோட்டக்கலை துறை அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும், அவற்றை செயல்படுத்தும் முறை பற்றியும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல்,
நீர் ஆதாரங்களை பெருக்குதல் மற்றும் சூரிய மின் சக்தியின் மூலம் பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் இடுபொருட்களின் மானிய விபரங்களையும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் குறித்தும் அவற்றை கட்டுப்படுத்தம் முறை குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார். உதவி பேராசியர் போஜராஜ் பங்கேற்று, நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் குறித்தும் அவற்றை கட்டுப்படுத்தும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.
The post சீன்னவீரசங்கிலியில் ரபி பருவ பயிற்சி முகாம் appeared first on Dinakaran.