- அன்புமணி
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- பிஏஎம்சி
- ஜனாதிபதி
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- விழுப்புரம்
- கடலூர்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- சேலம்
- சூறாவளி
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். வெள்ளம் ஏற்பட்டு நான்கு நாட்களாகும் நிலையில் இன்னும் பல இடங்களுக்கு மீட்புக் குழுவினரால் செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு பாதிப்புகள் கடுமையாக உள்ளன.
மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்காலிகமாக செப்பனிடவும், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் பெருந்தொகை தேவைப்படுகிறது. அதற்காக உடனடியாக ரூ2 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்காகவும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளை கொண்ட குழுவை ஒன்றிய அரசு அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் நிவாரண பணியை மேற்கொள்ள ரூ2 ஆயிரம் கோடியை உடனே ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.