புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அப்போது தமிழ்நாடு பாஜ தலைவராக இருந்த எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியது குறித்து முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இைத ரத்துசெய்யக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து முரசொலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய விளக்கம்பெற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், அரசியலுக்கு வர வேண்டுமென்றால் அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும் என்பதை மனுதாரர் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக மராத்தியில் கூட ஒரு பழமொழி உண்டு என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
The post முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.